9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர பதவிப் பிரமாணம்!

23 புரட்டாசி 2024 திங்கள் 04:43 | பார்வைகள் : 5481
இலங்கையின் ஒன்பதாவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், விருப்பு வாக்கு உள்ளடங்களாக 57 இலட்சத்து 40,179 வாக்குகளைப் பெற்று, இலங்கையின் 9ஆவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தெரிவானார்.