Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் பாடசாலையில்  தாக்குதல் சம்பவம்...

கனடாவில் பாடசாலையில்  தாக்குதல் சம்பவம்...

22 புரட்டாசி 2024 ஞாயிறு 07:42 | பார்வைகள் : 5697


கனடாவின் மொன்றியாலில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் மூவர் காயமடைந்துள்ளனர்.

தென்மேற்கு மொன்றியாலில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 24 வயதான நபர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

50 வயது மதிக்கத்தக்க மூன்று பேர் இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும், இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடொ அதிர்ச்சியையும் கவலையையும் வெளியிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் இதுரையில் கண்டறியப்படவில்லை. 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்