ஜப்பானில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம்

21 புரட்டாசி 2024 சனி 10:02 | பார்வைகள் : 6416
ஜப்பானில் கொட்டித்தீர்க்கும் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் மத்திய ஜப்பானில் இரண்டு நகரங்களிலுள்ள 30,000 பேரை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, வஜிமா நகரில் சுமார் 18,000 பேரையும், சுசூவில் 12,000 பேரையும் ஹொன்ஷு தீவில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் தஞ்சம் அடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் பல மாகாணங்களில் பலத்த மழை குறித்து அதி உயர் எச்சரிக்கையை அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.
12 ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து கரையை கடந்துள்ளதாக ஜப்பானின் பொது ஒளிபரப்பு நிறுவனமான NHK தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த பகுதிகள் புத்தாண்டு அன்று 7.5 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு தற்போது தான் மீண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025