இத்தாலியில் விமான விபத்து.. மூன்று பிரெஞ்சுக்காரர்கள் பலி!
20 புரட்டாசி 2024 வெள்ளி 18:39 | பார்வைகள் : 9472
இத்தாலியில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் மூன்று பிரெஞ்சு நபர்கள் பலியாகியுள்ளனர். மூவர் பயணிக்கக்கூடிய சிறிய விமானம் ஒன்றே விபத்துக்குள்ளானது.
கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இத்தாலியின் Tuscany மற்றும் Emilia-Romagna ஆகிய நகரங்களுக்கிடையே வைத்து காணாமல் போயிருந்தது. பின்னர் குறித்த விமானம் நேற்று வியாழக்கிழமை நண்பகல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், விமானத்தில் பயணித்த மூன்று பிரெஞ்சு பயணிகளும் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக மோசமான காலநிலையினால் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan