ஒலிம்பிக்கின் பின்னர் வெறிச்சோடிப்போன பரிஸ்..!
16 ஆவணி 2024 வெள்ளி 05:21 | பார்வைகள் : 14687
ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் பரிசின் பல பகுதிகள் வெறிச்சோடிப்போய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாப்பயணிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளதாகவும், உணவகங்கள், அருந்தகங்கள் மக்கள் இன்றி காட்சியளிப்பதாகவும், சில வீதிகளில் மக்கள் நடமாட்டம் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அருந்தகங்களிலும் உணவகங்களிலும் வாடிக்கையாளர்கள் மூன்று மடங்கினால் குறைவடைந்துள்ளதாகவும், கொவிட் 19 கால கோடைகாலம் போன்று பரிஸ் காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan