Gare de l'Est நிலையத்தில் - TGV சேவைகள் ஒருநாள் நிறுத்தம்..!

14 ஆவணி 2024 புதன் 19:24 | பார்வைகள் : 10488
Gare de l'Est நிலையத்தில் இருந்து இயக்கப்படும் TGV சேவை, அடுத்த மாதத்தில் ஒரு நாள் மட்டும் தடைப்பட உள்ளது.
செப்டம்பர் 21 ஆம் திகதி சனிக்கிழமை மட்டும் இந்த தடை ஏற்பட உள்ளது. அன்றைய நாளில் எந்த ஒரு TGV தொடருந்துகளும் குறித்த நிலையத்தில் நிறுத்தப்படவோ, இயக்கப்படவோ மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்குப் பகுதிகளுக்கு TGV இல் பயணிக்க உள்ள பயணிகள் அனைவரும் அருகில் உள்ள Gare du Nord தொடருந்து நிலையத்துக்கு (500 மீற்றர் இடைவெளி) செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த நிலையத்தில் TGV சேவைக்காம எதிர்கால திட்டங்கள் குறித்த ஆய்வு மற்றும் விரிவாக்க திட்டமிடல்கள் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இந்த தடை கொண்டுவரப்பட உள்ளது.