ஒலிம்பிக் : பயணக்கட்டணங்கள் குறைவடையாதது ஏன்?

14 ஆவணி 2024 புதன் 13:03 | பார்வைகள் : 14453
ஒலிம்பிக் போட்டிகளுக்காக பயணக்கட்டணங்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டிருந்தன. €2 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட மெற்றோ பயணச்சிட்டை €4 யூரோக்கள் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுக்கு வந்த போதிலும், பயணக்கட்டணங்கள் குறைக்கப்படவில்லை. தொடர்ந்தும் இரண்டு மடங்கு விலையிலேயே விற்பனை செய்யப்படு வருகிறது. கட்டணம் குறைக்கப்படாமல் இருப்பது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இல் து பிரான்சுக்கான பொது போகுவரத்து சேவை (Île-de-France Mobilités) தரப்பில் தெரிவிக்கையில், இந்த கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி பரா ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடையும் வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவிகோ அட்டைகளை புதுப்பிக்க உள்ளவர்கள் கட்டணக்குறைப்புக்காக செப்டம்பர் 9 ஆம் திகதி காலை வரை காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025