Paristamil Navigation Paristamil advert login

Lagny-sur-Marne : காவல்துறை வீரருக்கு - இரும்புக் கம்பி தாக்குதல்..!

Lagny-sur-Marne : காவல்துறை வீரருக்கு - இரும்புக் கம்பி தாக்குதல்..!

14 ஆவணி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 8699


கடமையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த காவல்துறை வீரர் ஒருவர் மீது இரும்புக் கம்பியினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் Lagny-sur-Marne (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றது. 93 ஆம் மாவட்டத்தின் குற்றவியல் தடுப்புப்பிரிவில் (BAC D93) பணிபுரியும் காவல்துறை வீரர் ஒருவர் இரவு 10 மணி அளவில் தனது மகிழுந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, மற்றொரு மகிழுந்து சாரதியுடன் வாக்குவாதம் எழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சில நிமிடங்களில் மேலும் சில மகிழுந்துகள் சம்பவ இடத்துக்கு வந்தடைந்துள்ளன. அதில் வந்தவர்கள் இரும்பு கம்பிகள், கட்டைகள் போன்றவற்றுடன் இறங்கி, குறித்த காவல்துறை வீரரை தாக்கியுள்ளனர். 

மிக மோசமாக அவரைப் போட்டு அடித்தனர். இதில் காவல்துறை வீரர் படுகாயமடைந்தார். 

ஆறு பேர் இணைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்