ஒலிம்பிக் போட்டிகளினால் பார்வையாளர்களை இழந்த வெர்சாய் மாளிகை..!

13 ஆவணி 2024 செவ்வாய் 11:22 | பார்வைகள் : 6928
ஒலிம்பிக் போட்டிகளைக் காண பல மில்லியன் பார்வையாளர்கள் பரிசில் குவிந்திருந்த போதும், ஏனைய சுற்றுலாத்தங்களான வெர்சாய் மாளிகை, லூவர் அருங்காட்சியகம் போன்றவை பார்வையாளர்களை இழந்துள்ளன.
ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்ற 14 நாட்களையும் சேர்த்து வெர்சாய் மாளிகைக்கு மொத்தமாக 212,350 பேர் வருகை தந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டின் இதே 14 நாட்கள் காலப்பகுதியில் வருகை தந்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இது 25% சதவீத வீழ்ச்சியாகும்.
அதேவேளை, லூவர் அருங்காட்சியகமும் இதே 14 நாட்களில் 22% சதவீத வீழ்ச்சியை சந்தித்திருந்தது. ஒலிம்பிக் போட்டிகளைக் காண மக்கள் படை எடுத்துச் சென்றதால் ஏனைய சுற்றுலாத்தலங்கள் பார்வையாளர்கள் வீழ்ச்சியைச் சந்தித்திருந்தன.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1