Montreuil : குழு மோதலை தடுக்க முற்பட்ட காவல்துறை வீரர் மீது தாக்குதல்..!
12 ஆவணி 2024 திங்கள் 19:07 | பார்வைகள் : 9343
குழு மோதல் ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்ட காவல்துறை வீரர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓகஸ்ட் 10, சனிக்கிழமை இரவு இச்சம்பவம் Montreuil (Seine-Saint-Denis) நகரை ஊடறுக்கும் நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது. Boulevard Gabriel Péri மற்றும் Boulevard de la Boissière பகுதிகளை இணைக்கும் பகுதியில் ஒன்றுகூடிய இளைஞர்கள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
விரைந்து சென்ற காவல்துறையினர், மோதலில் ஈடுபட்டவர்களில் இருவரைம் கைது செய்தனர். ஆனால் அங்கு நின்றிருந்தவர்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இதில் காவல்துறை வீரர் ஒருவர் தலையில் காயமடைந்துள்ளார்.
பின்னர் அவர் தனது சேவைத் துப்பாக்கியினால் வானம் நோக்கி சுட்டு, அவர்களிடம் இருந்து தப்பித்துக்கொண்டார். மிகவும் மூர்க்கத்தனமான அவர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த வீரர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan