பரிஸ் : விமானத்தில் பரபரப்பு. சிறுவன் கைது..!

12 ஆவணி 2024 திங்கள் 10:46 | பார்வைகள் : 9082
மொரோக்காவில் பிரான்சுக்கு வந்தடைந்த விமானம் ஒன்றில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறுவன் ஒருவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விமானத்தில் பிரான்சுக்கு வருகை தந்த சிறுவன் ஒருவன் தனது தொலைபேசியில் உள்ள Bluetooth இல், ஆபத்தான வெடிப்பொருள் என அர்த்தப்படும் வகையில் "engin explosif improvisé" என பெயர் வைத்துள்ளார். அவரது Bluetooth பெயர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, விமானத்துக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் பயணித்த 153 பயணிகளும் ஒருவர் ஒருவராக சோதனையிடப்பட்டார். இறுதியாக குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டார்.
அவர் தற்போது விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஒருமணிநேரத்துக்கும் மேலாக பயணிகள் அனைவரும் விமானத்துக்குள் தரித்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1