Paristamil Navigation Paristamil advert login

16 தங்கங்களுடன் பிரான்ஸ்..!

16 தங்கங்களுடன் பிரான்ஸ்..!

11 ஆவணி 2024 ஞாயிறு 05:44 | பார்வைகள் : 10215


பரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. நேற்று சனிக்கிழமை நாள் முடிவில் பிரான்ஸ் 16 தங்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 

67 கிலோ பிரிவில் Taekwondo எனும் கராத்தே விளையாட்டில் Althéa Laurin எனும் வீராங்கனை தங்கம் வென்றார். இந்த கராத்தே விளையாட்டில் பிரான்ஸ் முதன்முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளது. 

ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ள Breaking நடனப்போட்டியில் பிரான்ஸ் சார்பாக போட்டியிட்ட 36 வயதுடைய Dany Dann, வெள்ளிப்பதக்கத்தை பெற்றார்.

அதேபோல் நேற்றைய தினம் பெண்களுக்கான 100 மீற்றர் தடைகள ஓட்டப்போட்டியில் ( 100 Metres Hurdles) பிரான்ஸ் அணிக்காக Cyréna Samba-Mayela எனும் வீராங்கனை வெள்ளிப்பதக்கம் ஒன்றை பெற்று தந்திருந்தார்.

பிரான்ஸ் நாள் முடிவில் 16 தங்கம், 24 வெள்ளி, 22 வெண்கலப்பதக்கங்களுடன் மொத்தமாக 62 பதக்கங்களைப் பெற்று பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்