பிரெஞ்சுக் குடியரசின் மீதான தாக்குதல் - கடுங்கோபம்!!

10 ஆவணி 2024 சனி 11:36 | பார்வைகள் : 11914
கடந்த வார இறுதியில் 91 வயது மாவட்டமான, எசொன் மாவாவட்டத்திலுள்ள, மொன்ஜெரோன் (Montgeron) நகரத்தின் ஆரம்பப் பாடசாலை ஒன்று, நாசகார வேலையால் அடித்து நொறுக்கப்பட்டு, பெரும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது.
இது சார்க்கோசி உருவாக்கிய, லே ரெபுப்ளிகன் (Les Républicains) கட்சியின் தலைவர் எரிக் சியோட்டியை (Eric Ciotti) கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
«இது பிரெஞ்சுக் குடியரசின் மீதான தாக்குதல்»
«பாடசாலை செப்டெம்பரில் மீள அரம்பிக்கும் முன்னராக, இவையனைத்தும் திருத்தியமைக்கப்படல் வேண்டும். இதற்குப் பல்லாயிரக்கணக்கான யூரேக்கள் செலவாகும்»
«இந்தக் குற்றம் செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் குடும்பம் இந்தச் செலவீனத்தை அரசிற்கு செலுத்த வைக்க வேண்டும்»
«இதற்கான தகுதி உள்துறை அமைச்சிற்கோ, அல்லது தற்போதுள்ள தற்காலிக அரசசிற்கோ, இருக்கும் என நான் நம்பவில்லை»
என மிகவும் கடுமையாக எச்ரித்துள்ளார் எரிக் சியோட்டி.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025