அவதானம் நாளை (11/08) A 86 நெடுஞ்சாலை மூடப்படும்.
10 ஆவணி 2024 சனி 07:49 | பார்வைகள் : 15606
பாரிஸ் தலைநகரையும் அதன் புறநகரங்களையும் இணைக்கும் Boulevard périphérique சுற்று பாதைக்கு அடுத்த சுற்று பாதையாக அமைந்த 78 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள A86 நெடுஞ்சாலை நாளை (11/08) மூடப்படும் அபாயம் காணப்படுகிறது. 'Petite Couronne' என அழைக்கப்படும் தலைநகரையும்
Antony, Créteil, Nogent-sur-Marne, Bobigny, Saint-Denis, Nanterre மற்றும் Versailles இணைக்கும் நகரங்களின் நெடுஞ்சாலையான இந்த A86 நெடுஞ்சாலையில் 28 ஜனவரி 1998 திறந்த வைக்கப்பட்ட பிரான்சின் மிகப் பெரிய உதைபந்தாட்ட அரங்கமாகிய Stade de France அமைந்துள்ளதாலேயே நாளை மூடப்படும் நிலை தோன்றியுள்ளது.
கடந்த ஜூலை 26ம் திகதி செய்ன் நதி நீரின் மேலே ஆரம்பிக்கப்பட்ட 'Paris 24' ஒலிம்பிக் போட்டிகள் பதினாறு நாட்கள் நடைபெற்று நாளைய தினம் நிறைவு காணவுள்ளது. குறித்த நிறைவு விழா நிகழ்வுகள் பலத்த பாதுகாப்பு மத்தியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா A86 நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள 'Stade de France' விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதனால் குறித்த A86 நெடுஞ்சாலையின் ஒருபகுதி நாளை முழுவதும் பொதுமக்களின் பாவனைக்கு மூடப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan