Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : உடைந்த கண்ணாடி போத்தலால் தாக்குதல்.. உயிருக்கு போராட்டம்..!

பரிஸ் : உடைந்த கண்ணாடி போத்தலால்  தாக்குதல்.. உயிருக்கு போராட்டம்..!

10 ஆவணி 2024 சனி 07:27 | பார்வைகள் : 13732


உடைந்த கண்ணாடி போத்தலினால் நபர் ஒருவர் குத்தப்பட்டதில், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரிஸ் 18 ஆம் வட்டாரத்தின் Barbès பாலத்தின் கீழ் நேற்று ஓகஸ்ட் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் பிறிதொருவரை கண்ணாடி போத்தலால் சரமாரியாக குத்தியுள்ளார். அடிவயிற்றில், முகத்தில், கைகளில் என உடலின் பல பகுதிகளில் பல முறை குத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர்  மருத்துவக்குழுவினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரையும், மற்றொரு சந்தேகநபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்