நாளை இல் து பிரான்சுக்கு அனல் காற்று எச்சரிக்கை!

9 ஆவணி 2024 வெள்ளி 19:00 | பார்வைகள் : 15148
நாளை ஓகஸ்ட் 10 ஆம் திகதி சனிக்கிழமை இல் து பிரான்சுக்குள் 35°C வரை வெப்பம் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரெஞ்சு வானிலை ஆய்வு மையம் (Météo-France) தெரிவிக்கையில், பகல் நேரத்தில் வெப்ப அனலை எதிர்கொள்ள நேரிடும் எனவும், 35°C வரை பகலில் வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இரவு நேரத்தில் 23°C வரை வெப்பத்தை உணரக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஆரம்பிக்கும் இந்த வெப்பம், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை வரை தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025