நெடுஞ்சாலையில் வீசப்பட்ட சடலம்..!
9 ஆவணி 2024 வெள்ளி 18:00 | பார்வைகள் : 9455
கழிவுகள் அகற்ற பயன்படுத்தப்படும் பையினால் (sac poubelle) பொதி செய்யப்பட்ட நிலையில் நெடுஞ்சாலையில் வீசப்பட்டிருந்த சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் புதன்கிழமை இச்சம்பவம் Lyon நகரில் இடம்பெற்றுள்ளது. லியோனின் 9 ஆம் வட்டாரத்தின் அருகே உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் அருகில் இருந்து ஆண் ஒருவரது சடலத்தை அப்பகுதி காவல்துறையினர் மீட்டனர். உடற்கூறு பரிசோதனைகளுக்காக சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கழிவு அகற்ற பயன்படுத்தப்படும் பையினால் சடலம் சுற்றிக்கட்டப்பட்டு இருந்ததாகவும், உடலில் காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan