■ வேலை தேடுவோரின் எண்ணிக்கை வீழ்ச்சி..!

9 ஆவணி 2024 வெள்ளி 11:34 | பார்வைகள் : 7621
பிரான்சில் வேலைதேடுவோரின் எண்ணிகை சிறிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
INSEE நிறுவனம் வெளியிட்ட தகவல்களின் படி, தற்போது வேலை தேடுவோரின் எண்ணிக்கை (taux de chômage) 7.3% சதவீதமாக உள்ளது. இவாண்டின் முதலாவது காலாண்டோடு ஒப்பிடுகையில், இரண்டாவது காலாண்டில் 0.2% சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அல்லது 40,000 பேரால் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. தற்போது பிரான்சில் 2.3 மில்லியன் பேர் வேலை தேடுவோருக்கான பெயர் பட்டியலில் தங்களை பதிவு (France Travail) செய்துகொண்டு கொடுப்பனவுகளை பெற்று வருகின்றனர்.
இந்த வீழ்ச்சி எதிர்பார்த்திராத ஒன்று என INSEE நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள பொருளாதார நிலவரப்படி இரண்டாவது காலிறுதியில் வேலை தேடுவோருக்கான எண்ணிக்கை தொடர்ந்தும் மாற்றமின்றி நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025