வாரஇறுதி நாட்களில் இல் து பிரான்சுக்குள் போக்குவரத்து நெரிசல்!

9 ஆவணி 2024 வெள்ளி 09:57 | பார்வைகள் : 10480
ஓகஸ்ட் 10-11 ஆம் திகதிகளில் இல் து பிரான்சின் வெளிச்செல்லும் வீதிகளில் (départs) பலத்த போக்குவரத்து நெரிசல் பதிவாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை காரணமாக பலர் சுற்றுலா செல்லும் நோக்கோடு பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் இருந்து இந்த வார இறுதி நாட்களில் புறப்படுவார்கள் எனவும், இதனால் மிக நீண்ட தூரத்துக்கு வாகன நெருக்கடி ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக A6, A10 நெடுஞ்சாலைகளுடன் A3, A86 மற்றும் A6B சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை மற்றும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களும் RN 118 நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான மரதன் ஓட்டப்போட்டிகள் இடம்பெற உள்ளதால் இவ்விரு நாட்களும் குறித்த வீதி Vélizy-Villacoublay தொடக்கம் Pont de Sèvres வரை மூடப்பட உள்ளது.