Aubigny-au-Bac : இருவர் சுட்டுக்கொலை..!
4 ஆவணி 2024 ஞாயிறு 12:25 | பார்வைகள் : 14196
Nord மாவட்டத்த நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
Aubigny-au-Bac நகரில் வைத்து நள்ளிரவு 00:15 மணிக்கு இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. 34 மற்றும் 38 வயதுடைய இருவர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அங்குள்ள மோட்டார் சைக்கிள் ஓடும் குழு ஒன்றின் அங்கத்தவர்கள் எனவும், மோட்டார் சைக்கிளில் வருகை தந்த ஆயுததாரிகள் இத்துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர்களைக் காப்பாற்ற முயன்ற மருத்துவக்குழுவனரின் முயற்சி பலனளிக்கவில்லை. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan