ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு.. கோடிக்கணக்கானோர் பார்த்து சாதனை..!

3 ஆவணி 2024 சனி 16:22 | பார்வைகள் : 8331
கடந்தவாரம் முழுவதும் ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பநாள் நிகழ்வே உலகம் முழுவதும் பேசுபொருளாக இருந்தது. கோடிக்கணக்கான மக்கள் நிகழ்ச்சியை தொலைக்காட்சி வழியாக பார்வையிட்டு சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.
பிரெஞ்சு தொலைக்காட்சிகள் வழியாக ஆரம்ப நாள் நிகழ்வை நேரலையாக 24.4 மில்லியன் பேர் பார்வையிட்டிருந்தனர். அதன் மறு ஒலிபரப்பை 1.2 மில்லியன் பேர் பார்வையிட்டிருந்தனர். பிரெஞ்சு தொலைக்காட்சிகளின் வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிகப்பேரால் பார்வையிடப்பட்ட நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது.
இந்த நிகழ்வின் முக்கிய நிகழ்வான Aya Nakumura பாடல் பாடியிருந்தபோது மட்டும் 31.4 மில்லியன் பேர் அதிகபட்சமாக பார்வையிட்டிருந்தனர்.
முன்னதாக 2022 ஆம் ஆண்டு டிசம்பர் உதைபந்தாட்ட உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியை 24.08 மில்லியன் பேர் பார்வையிட்டிருந்தனர். இதுவே பிரான்சின் முந்தைய சாதனையாக இருந்தது. அந்த போட்டியில் பிரான்ஸ் -அர்ஜண்டினா மோதியிருந்தது.
மேற்படி தகவல்களை Médiamétrie நிறுவனம் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025