Sevran : காவல்துறை வீரர் படுகாயம்!

3 ஆவணி 2024 சனி 15:53 | பார்வைகள் : 12565
Sevran நகரில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்றை தடுக்க முற்பட்ட காவல்துறை வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று ஓகஸ்ட் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள CGR International எனும் நிறுவனத்துக்குள் இரு கொள்ளையர்கள் நுழைய முற்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொள்ளையர்களை கைது செய்ய முற்பட்டபோது, இரும்பு கம்பி ஒன்றினால் காவல்துறை வீரர் ஒருவரை கொள்ளையன் ஒருவர் தாக்கியுள்ளார்.
இதில் வீரர் படுகாயமடைந்துள்ளார். அவர் உடனடியாக Robert-Bellanger (Aulnay-sous-Bois) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025