ஒலிம்பிக் தொழிழ்நுட்ப ஊழியர் ஒருவருக்கு ஆறு மாத சிறை!

3 ஆவணி 2024 சனி 13:08 | பார்வைகள் : 9120
ஒலிம்பிக் போட்டிகளின் தொழில்நுட்ப ஊழியர் ஒருவருக்கு ஆறுமாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெண்களை ஆபாசமாக படம் பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார். பெண்களை ஆபாசமாக படம் பிடிக்கப்பட்ட 72 காணொளிகள் அவரது தொலைபேசியில் இருந்ததாகவும், அதனை ஆதாரமாக கொண்டு அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட, அவருக்கு ஆறு மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 30, செவ்வாய்க்கிழமை La Défense (Hauts-de-Seine) RER நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும், அங்கு நடந்து சென்ற பெண்களை ரகசியமான சிறிய கமராக்களை வைத்து படம் பிடித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாள் நிகழ்வில் தொழில்நுட்ப ஊழியராக கடமையாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025