பாலிவுட்டில் கலக்க போகும் பகத் பாசில்..
6 புரட்டாசி 2024 வெள்ளி 12:46 | பார்வைகள் : 8961
பிரபல இயக்குனர் பாசில் மகன் பகத் பாசில், மலையாள திரை உலகில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதனை அடுத்து அவர் சிவகார்த்திகேயன் நடித்த ’வேலைக்காரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிலையில் அதன் பின்னர் ’சூப்பர் டீலக்ஸ்’ ’விக்ரம்’ ’மாமன்னன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார்.
அதேபோல் தெலுங்கில் ‘புஷ்பா’ படத்தில் நடித்த பகத் பாசில், ‘புஷ்பா 2’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
பிரபல பாலிவுட் இயக்குனர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் தான் பகத் பாசில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் ’ராக் ஸ்டார்’, ‘ஹைவே’ ‘தமாசா’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பதும், வித்தியாசமாக கதை சொல்பவர் என்ற பெயர் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான ’அமர்சிங் சமிதா’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இவரது அடுத்த படத்தின் நாயகனாக பகத் பாசில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan