பரிஸ் : கழுத்து வெட்டப்பட்ட பெண்.. அவரது மகிழுந்து திருட்டு!

6 புரட்டாசி 2024 வெள்ளி 11:57 | பார்வைகள் : 10764
பெண் ஒருவரைத் தாக்கி அவரது மகிழுந்து திருடப்பட்டுள்ளது. பரிஸ் 17 ஆம் வட்டாரத்தின் Courcelles பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று செப்டம்பர் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் எச்சரிக்கப்பட்டு 17 ஆம் வட்டாரத்தின் Rue Jouffroy-d'Abbans வீதிக்கு அழைக்கப்பட்டனர். விரைந்து வந்த அவர்கள் அங்கு பெண் ஒருவர் காயமடைந்திருப்பதை பார்த்துவிட்டு, விசாரணைகளை மேற்கொண்டனர்.
சில நிமிடங்களுக்கு முன்னர், குறித்த பெண் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகிழுந்தை எடுப்பதற்காக வருகை தந்தபோது, அவரை சூழ்ந்துகொண்ட இரு நபர்கள் அப்பெண்ணை தாக்கி விட்டு மகிழுந்தை திருடிக்கொண்டு தப்பிச் சென்றதாக அவர் தெரிவித்தார். கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட காயம் இருந்ததாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களே காவல்துறையினரை அழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலதிக விசாரணைகளில், மகிழுந்தை திருடிக்கொண்டு தப்பி ஓடிய நபர்கள், வீதியில் பயணித்த வாடகை மகிழுந்து ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகி, மகிழுந்தை அங்கேயே விட்டுவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025