பரா ஒலிம்பிக் இலட்சினை இடமாற்றம்...!!

6 புரட்டாசி 2024 வெள்ளி 09:41 | பார்வைகள் : 7217
ஒலிம்பிக் போட்டிகளின் வளையங்கள் ஈஃபிள் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது போல், பரா ஒலிம்பிக் போட்டிகளின் வளையங்கள் (இலட்சினை) Arc de Triomphe கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளமை அறிந்ததே.
போட்டிகள் நிறைவடைந்ததும் அகற்றப்பட உள்ள இந்த பரா ஒலிம்பிக் வளையங்கள், அங்கிருந்து, Saint-Ouen ( Seine-Saint-Denis) நகரில் உள்ள இல் து பிரான்ஸ் மாகாண தலைமைச் செயலகத்துக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கான விருப்பத்தினை மாகாண முதல்வர் Valérie Pécresse , நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
”நான் *அஜிடோவை வைத்திருக்க விரும்புகிறேன்!’ என Valérie Pécresse தெரிவித்தார். அஜிடோ (Agitos) என்பது பரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட இலட்சனையை குறிப்பதாகும். சிவப்பு, நீலம் பச்சை போன்ற வண்ணத்தில் காட்சியளிக்கும் இந்த அஜிடோவுக்கு இலத்தின் மொழியில் ‘நான் அசைகிறேன்’ என அர்த்தமாகும். மாற்றுத்திறனாளிகள் ஒரு இடத்தில் முடங்கிக்கிடக்காமல் அவர்களும் விளையாட்டில் ஈடுபடவேண்டும் என்பதற்காக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதேபோல், ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டளர்கள் ‘ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக்’ வளையங்களை பரிசில் எங்கேனும் நிரந்தரமாக அமைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025