பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

5 புரட்டாசி 2024 வியாழன் 08:47 | பார்வைகள் : 6867
இந்தோனேசியாவின் பப்புவா நியூ கினியாவில் உள்ள அங்கோரம் பகுதியில் இருந்து வடக்கு- வடகிழக்கே 66 கி.மீ. தொலைவில் காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று காலை 6.33 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10.0 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 3.49 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 144.25 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
ஆனால் பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற பாதிப்புகள் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025