A63 நெடுஞ்சாலையில் 264 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

5 புரட்டாசி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 8630
A63 நெடுஞ்சாலை வழியாக கடத்திச் செல்லப்பட்ட 264 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் இருந்து பிரான்சுக்குள் நுழைந்த கனரக வாகனம் ஒன்று Bordeaux மற்றும் Bayonne நகரங்களுக்கு இடையே வழிமறிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 190 கிலோ களி பதத்திலான கஞ்சாவும், 74 கிலோ உலர்ந்த கஞ்சா இலைகளும் என தெரிவிக்கப்படுகிறது.
வாகனத்தில் வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த ஓகஸ்ட் 17 ஆம் திகதி இடம்பெற்றுள்ளபோதும், நேற்று செப்டம்பர் 4 ஆம் திகதி புதன்கிழமையே இது தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025