பரிஸ் : வீதியை கடக்க முற்பட்டவரை மோதி தள்ளிய மகிழுந்து - ஒருவர் பலி..!!

4 புரட்டாசி 2024 புதன் 17:21 | பார்வைகள் : 12571
வீதியை கடக்க முற்பட்ட மூதாட்டி ஒருவர் மகிழுந்து மோதி பலியாகியுள்ளார். பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5.15 மணி அளவில் Place Ambroise-Croizat பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 80 வயதுடைய மூதாட்டி ஒருவர் வீதியை கடக்க முற்பட்ட நிலையில், வீதியில் பயணித்த மகிழுந்து ஒன்று அவரை மோதியுள்ளது. தூக்கி வீசப்பட்ட அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இருந்தபோதும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
அரைமணிநேரம் கழித்து அவர் உயிரிழந்தார்.
மகிழுந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி சம்பவத்தின் போது அவர் மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025