A350s விமானத்தில் இயந்திரக் கோளாறு.. 15 விமானங்கள் பாதிப்பு..!

4 புரட்டாசி 2024 புதன் 08:35 | பார்வைகள் : 9004
பிரெஞ்சு தயாரிப்பான A350s விமானங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 15 விமானங்களுக்கு இயந்திரம் மாற்றப்பட உள்ளது.
சீனாவின் Hong Kong நகரை பிரதானமாக கொண்டு இயங்கும் Cathay Pacific விமான சேவையின் A350s விமானம் ஒன்று இயந்திரப்பழுது காரணமாக திங்கட்கிழமை நிறுத்தப்பட்டது. அதை அடுத்து பல்வேறு விமான சேவைகள் தடைப்பட்டதுடன், 15 சேவைகளில் ஒரேபோன்ற பழுதுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆனால் என்ன மாதிரியான பழுது என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
குறித்த விமானத்தின் இயந்திரங்களை பிரபலமான Rolls-Royce நிறுவனம் தயாரித்துள்ளது.
அதேவேளை, A350s ரக விமானத்தை உலகம் முழுவதும் உள்ள பல்வேறு விமான சேவைகள் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் Cathay Pacific நிறுவனம் மாத்திரம் புகார் அளித்துள்ளமை பலதரப்பட்ட விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025