நூற்றுக்கணக்கான வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளன.. பெற்றோர்கள் அதிர்ச்சி!

3 புரட்டாசி 2024 செவ்வாய் 09:10 | பார்வைகள் : 8604
புதிய கல்வி ஆண்டு நேற்று செப்டம்பர் 2 ஆம் திகதி ஆரம்பித்திருந்தது. தலைநகர் பரிசில் நூற்றுக்கணக்கான வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 183 வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றில் 125 ஆரம்ப கல்வி வகுப்பறைகளும், 58 நடுநிலை கல்வி வகுப்பறைகளுமாகும்.
இந்த சூழ்நிலை பெற்றோர்களை கோபப்படுத்தியுள்ளது. பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபர் அறைக்குள் நுழைந்த பெற்றோர்கள் பலர், அங்கு தங்களது கோபத்தினை வெளிப்படுத்தினர்.
வகுப்பறையில் 17 மாணவர்களுக்கு மேல் மிகாமல் இருக்கவேண்டும் என நிலையில் தற்போது 25 இற்கும் மேற்பட்ட மாணவர்களை இணைத்து கற்றல் நடவடிக்கை இடம்பெறுவதாகவும், சில வகுப்பறைகளில் 30 மாணவர்கள் வரை இருப்பதாகவும் பெற்றோர் விசனம் தெரிவித்தனர்.
இந்த நிலமையினை உடனடியாக அரசு கவனத்தில் எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025