ஒன்றரை மாதங்களின் பின்னர் அறிவிக்கப்பட உள்ள புதிய பிரதமர்..??!

3 புரட்டாசி 2024 செவ்வாய் 06:09 | பார்வைகள் : 8800
ஜனாதிபதியுடனான தொடர் சந்திப்புகளின் பின்னர், இன்று செப்டம்பர் 3 ஆம் திகதி நாட்டின் புதிய ஜனாதிபதி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சித்தலைவர்கள், செனட் சபை தலைவர், சபாநாயகர், முன்னாள் பிரதமர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் என கடந்த வாரங்களில் பலருடன் தொடர் சந்திப்புக்களை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மேற்கொண்டிருந்தார். இந்த சந்திப்புக்களின் முடிவில், இன்று செவ்வாய்க்கிழமை புதிய பிரதமரை அறிவிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
பொது தேர்தல் இடம்பெற்று ஒன்றரை மாதங்களுக்கு மேலாகின்றன. பதவி விலகல் கடிதம் வழங்கிய கப்ரியல் அத்தாலே தொடர்ந்தும் புதிய பிரதமர் அறிவிக்கும் வரை பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் பதவிக்கு பல்வேறு பெயர்கள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் முன்னாள் பிரதமர்Bernard Cazeneuveவும் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025