ஒலிம்பிக் அரங்கத்துக்குள் நுழைய முற்பட்ட வீடற்றவர் கைது!

3 புரட்டாசி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 7925
பரா ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்று வரும் அரங்கான l'Arena Bercy இற்குள் நுழைய முற்பட்ட வீடற்றவர் (homme sans-abri) ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சக்கரநாற்காலி கூடைப்பந்து போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த அரங்கில், கூரை வழியாக ஏறி உள் நுழைய முற்பட்ட ஒருவரே கடந்த ஓகஸ்ட் 31, சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். நண்பகல் 12 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் உடனடியாக அவரைக் கைது செய்தனர். குறித்த நபர் ஒரு வீடற்றவர் எனவும், அவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அவரிடம் D பிரிவு ஆயுதமும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025