பரிஸ் : பாதசாரியை மோதிவிட்டு தப்பி ஓடிய மகிழுந்து.. சாரதி கைது..!!
2 புரட்டாசி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 7647
பாதசாரி ஒருவரை மோதித்தள்ளிவிட்டு தப்பி ஓடிய மகிழுந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று செப்டம்பர் 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. Rue Ordener வீதியில் பிற்பகல் 3.40 மணி அளவில் நடைபாதையில் நடந்துசென்ற ஒருவரை வீதியில் பயணித்த மகிழுந்து ஒன்று பின்னால் வந்து மோதியுள்ளது. இதில் பாதசாரி படுகாயமடைந்துள்ளார்.
அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய சாரதில், உடனடியாக துரத்திப்பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan