பிரான்சுக்கு இரட்டைத்தங்கம்!
1 புரட்டாசி 2024 ஞாயிறு 15:35 | பார்வைகள் : 8782
பரா ஒலிம்பிக் போட்டிகளில் இன்று பிரான்சுக்கு இரட்டைத்தங்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடுதலிலும், பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப்போடியிலும் இந்த தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.
10 மீற்றர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பிரெஞ்சு வீரர் Tanguy De La Forest தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.
பெண்களுக்கான மிதிவண்டி போட்டியில் பிரெஞ்சு வீராங்கனை Marie Patouillet தங்கம் வென்றார். 3 மணிநேரமும் 35 நிமிடங்களிலும் இந்த எல்லைக் கோட்டைக் கடந்தார்.
அதே போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற வீராங்கனை Heïdi Gaugain, மணிநேரம் 37 நிமிடங்களிலும் எல்லைக் கோட்டைக் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பிரான்ஸ் தற்போது ஐந்து தங்கம், ஏழு வெள்ளி, 10 வெண்கல என மொத்தமாக 22 பதக்கங்களுடன் பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan