பரிஸ் : மிதமான வெப்பத்துடன் கடந்த ஓகஸ்ட்..!
1 புரட்டாசி 2024 ஞாயிறு 14:34 | பார்வைகள் : 5832
இவ்வருடத்தின் ஓகஸ்ட் மாதம், மிதமான வெப்பத்துடனும், சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் அதிகளவான வெப்ப நாட்களுடன் கழிந்திருந்தது.
2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில், தலைநகர் பரிசில் இவ்வருட ஓகஸ்ட் மாதம் +1.1°C வெப்பம் அதிகமாகவும், 14% சதவீதம் அதிக சூரிய ஒளியும் பதிவாகியிருந்தது. மொத்தமாக 245 மணிநேரங்களும் 8 நிமிடங்களும் சூரிய ஒளி பதிவாகியுள்ளது. (215 மணிநேரங்களே எதிர்பார்க்கப்பட்டிருந்தது)
குறிப்பாக ஓகஸ்ட் 5 ஆம் திகதி திங்கட்கிழமை கிட்டதட்ட 14 மணிநேரம் சூரிய ஒளி பதிவாகியிருந்தது. அதேவேளை ஓகஸ்ட் 17 ஆம் திகதி சூரிய ஒளி ஒரு விநாடி கூட பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த 31 நாட்கள் கொண்ட மாதத்தில் மொத்தமாக 58.4 மில்லிமீற்றர் மழை பதிவானது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan