Nanterre : கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பெண் மீது மோதியது...!

31 ஆவணி 2024 சனி 07:00 | பார்வைகள் : 7680
வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது. கால்முறிவுக்கு உள்ளான பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் ஓகஸ்ட் 29, வியாழக்கிழமை இரவு 8.30 மணி அளவில் Nanterre நகரில் இடம்பெற்றுள்ளது. தலைக்கவசம் அணியாத இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வேகமாக பயணித்து இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளார். பந்தயம் ஒன்றில் ஈடுபட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எலும்பு முறிவுக்கு உள்ளான பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவர் தேடப்பட்டு வருகிறார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1