வெள்ளிக் குதிரையை பார்வையிட திரளும் மக்கள்.. 35,000 பேர் முன்பதிவு..!

30 ஆவணி 2024 வெள்ளி 16:01 | பார்வைகள் : 6572
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பநாள் நிகழ்வின் போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த வெள்ளிக்குதிரை தற்போது பரிஸ் நகரசபை வளாகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நேற்று ஓகஸ்ட் 29 ஆம் திகதி முதல் அதனை பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அக்குதிரையை பார்வையிட அதிகளவான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்பதிவுகளுக்கான இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட முதல் 6 மணிநேரத்தில் மட்டும் 35,000 பேர் முன்பதிவுகள் செய்துள்ளனர்.
தற்போது முன்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் மீண்டும் முன்பதிவுகள் ஆரம்பமாகும் என நகரசபை உறுதி செய்துள்ளது.