UEFA வரலாற்றில் அதிக கோல்கள் அடித்து சாதனை...!

30 ஆவணி 2024 வெள்ளி 09:11 | பார்வைகள் : 3956
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, UEFA சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சிறப்பு விருதைப் பெற்றார்.
போர்த்துகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் மற்றும் ஜுவெண்டஸ் ஆகிய அணிகளுக்காக மொத்தம் 140 கோல்கள் அடித்துள்ளார்.
இதன்மூலம் UEFA சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் எனும் சாதனையைப் படைத்தார்.
இதற்காக மொனாகோவில் நடந்த விழாவில் ரொனால்டோ சிறப்பு விருதைப் பெற்றார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்,
"சாம்பியன்ஸ் லீக் போட்டியின் எல்லா நேரத்திலும் அதிக கோல்கள் அடித்தவர் என்பதற்காக, இந்த விருதைப் பெறுவதில் பெருமை அடைகிறேன். இந்த பாதையில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி!" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தனது கேரியரில் 899 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ, 1000 கோல்கள் அடிப்பதே தனது இலக்கு என்று கூறியிருந்தார்.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1