பிரான்சில் கடற்சிங்கம் பிறப்பு!
30 ஆவணி 2024 வெள்ளி 13:00 | பார்வைகள் : 7073
பிரான்சில் கடற்சிங்கம் (otarie) ஒன்று பெண் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியினை parc zoologique விலங்கியல் பூங்கா அறிவித்துள்ளது.
கடற்சிங்கம் ஒன்று கடந்த ஜூலை 28 ஆம் திகதி பெண் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இத்தகவலை நேற்று ஓகஸ்ட் 29 ஆம் திகதி வியாழக்கிழமை அறிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் குறித்த உயிரியல் பூங்கா மீள் திறப்பு செய்யப்பட்டதில் இருந்து கடற்சிங்கம் ஒன்று குட்டி ஈன்றுவது இது மூன்றாவது முறையாகும்.
Naya என பெயரிடப்பட்ட பெண் கடற்சிங்கத்துக்கும் Portos என பெயரிடப்பட்ட ஆண் கடற்சிங்கத்துக்கும் இந்த குட்டி கடற்சிங்கம் பிறந்ததாகவும், விரைவில் குட்டிக்கு பெயர் சூட்டும் நிகழ்வு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் இவ்வருடத்தில் மட்டும் 130 கடற்சிங்கங்கள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan