Paristamil Navigation Paristamil advert login

பரா ஒலிம்பிக் : இரண்டு மில்லியன் நுழைவுச் சிட்டுகள் விற்று சாதனை!

பரா ஒலிம்பிக் : இரண்டு மில்லியன் நுழைவுச் சிட்டுகள் விற்று சாதனை!

27 ஆவணி 2024 செவ்வாய் 19:09 | பார்வைகள் : 8698


பரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக மொத்தமாக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் நுழைவுச் சிட்டைகளில், தற்போது வரை இரண்டு மில்லியன் சிட்டைகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு பரா ஒலிம்பிக் போட்டிகளிலும் இதுபோன்ற அதிக நுழைவுச் சிட்டைகள் விற்பனையாகவில்லை என பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாட்டுக் குழு மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. இதில் 200,000 பாடசாலை மாணவர்களுக்கு 15 யூரோக்கள் கட்டணத்தில் நுழைவுச் சிட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இன்னும் para-athlétisme, la boccia மற்றும் la parahaltérophilie போன்ற ஒருசில போட்டிகளுக்கான நுழைவுச் சிட்டைகள் மாத்திரமே விற்பனைக்கு இருப்பதாகவும், அவை அடுத்தடுத்த நாட்களில் விற்பனையாகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் எப்போதும் இல்லாத அளவு இம்முறை அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் பரா ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்