200% சதவீதத்தால் அதிகரித்துள்ள யூத மதம் மீதான தாக்குதல்.. உள்துறை அமைச்சர் கவலை..!
 
                    25 ஆவணி 2024 ஞாயிறு 21:00 | பார்வைகள் : 12158
யூத மதத்தின் மீதான தாக்குதல்கள் 200% சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்துள்ளார்.
பிரான்சில் நிகழ்த்தப்படும் மதங்கள் மீதான தாக்குதல்களில் மூன்றில் இரண்டு தாக்குதல்கள் யூத மதம் மீதே நிகழ்த்தப்படுகிறது என தெரிவித்த அமைச்சர், இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் நாட்டில் யூத மதம் மீதான தாக்குகள்கள் 200% சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இன்று ஓகஸ்ட் 25, ஞாயிற்றுக்கிழமை France 2 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் மேற்படி தகவல்களை அவர் வெளியிட்டார்.
சனிக்கிழமை காலை La Grande-Motte நகரில் உள்ள யூத வழிபாட்டுத் தலம் எரியூட்டப்பட்டிருந்தது. அதை அடுத்து உள்துறை அமைச்சர் Gérald Darmanin சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டிருந்தார். Nîmes நகரில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
        சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan