Clichy : காவல்துறையினரை மோதிய மகிழுந்து.. இரு வீரர்கள் காயம்..!
.jpg) 
                    25 ஆவணி 2024 ஞாயிறு 18:31 | பார்வைகள் : 7966
காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்த மகிழுந்து ஒன்று, இரு காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்களை மோதித்தள்ளியுள்ளது. இதில் இரு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
Clichy (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் நேற்று ஓகஸ்ட் 24, சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. porte de Pantin பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக பயணித்த மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஆனால் குறித்த மகிழுந்து கட்டுப்பாட்டை மீறி தப்பிச் சென்றது. அதை அடுத்து காவல்துறையினர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் குறித்த மகிழுந்தை துரத்திச் சென்றனர்.
பின்னர் Porte de Saint-Ouen பகுதியில் வைத்து குறித்த காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்களை குறித்த மகிழுந்து இடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று ஓடி மறைந்துள்ளது.
தூக்கி வீசப்பட்ட காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
 
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 ALARME 24 மணி நேர பாதுகாப்பு
        ALARME 24 மணி நேர பாதுகாப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan