Libération de Paris : யூத மதத்துக்கு ஆதரவாக பிரெஞ்சு தேசம் இருக்கிறது.. ஜனாதிபதி உரை..!

25 ஆவணி 2024 ஞாயிறு 17:14 | பார்வைகள் : 11901
‘யூத மதத்துக்கு ஆதரவாக ஒட்டுமொத்த பிரெஞ்சு தேசமே இருக்கிறது’ என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
La Grande-Motte (Hérault) நகரில் உள்ள யூத வழிபாட்டுத்தலம் மீது சமூகவிரோதிகள் சிலரால் எரியூட்டப்பட்டிருந்தது. இச்சம்பவம் யூத மதத்தினர் மீதான வெறுப்பின் காரணமாக இடம்பெற்றுள்ளது. அதை அடுத்து இன்று ஜனாதிபதி மேற்படி கருத்தினை வெளியிட்டார்.
“யூத எதிர்ப்புக்கு எதிராக ஒருமனதாக குரல் எழுப்பப்படுகிறது. வெறுப்புக்கு எதிரான இந்த முடிவற்ற போராட்டத்தைத்தான் இன்றும் நாம் தொடர வேண்டும். யூத எதிர்ப்புக்கு எதிரான போராட்டம் நாட்டின் ஒரு நிலையான போர். அது எப்போதும் நடைமுறையில் இருக்கும்” என தெரிவித்தார்.
இன்று ஓகஸ்ட் 25 ஆம் திகதி இடம்பெற்ற பரிஸ் விடுதலையான நாள் என சொல்லப்படும் ‘ Libération de Paris' இன் 80 ஆவது ஆண்டு நிறைவு நாள் கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். அதன் போது ஆற்றிய உரையில் மேற்படி கருத்தினை அவர் வெளியிட்டிருந்தார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025