Paristamil Navigation Paristamil advert login

■ பிரான்சை வந்தடைந்தது பரா-ஒலிம்பிக் தீபம்..!

■ பிரான்சை வந்தடைந்தது பரா-ஒலிம்பிக் தீபம்..!

25 ஆவணி 2024 ஞாயிறு 12:38 | பார்வைகள் : 7453


பரா ஒலிம்பிக் தீபம் இன்று நண்பகல் பிரான்சை வந்தடைந்தது. இங்கிலாந்தில் இருந்து Tunnel sous la Manche வழியாக இந்த தீபம் வந்தடைந்துள்ளது.

பரா ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், அப்போட்டிகளின் பிறப்பிடமான இங்கிலாந்தில் இருந்து இந்த தீபம் தருவிக்கப்பட்டது. இந்த தீபத்தினை பரா-ஒலிம்பிக் (2004) வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனை Emmanuelle Assmann பெற்றுக்கொண்டார். அதை அடுத்து இந்த ஒலிம்பிக் தீபம் நாடு முழுவதும் உள்ள 50 நகரங்களுக்கு கொண்டுசெல்லப்பட உள்ளது.

மொத்தமாக நான்கு மாதிரித் தீபங்கள் 50 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளதுடன், அதனை 1,000 பேர் சுமக்க உள்ளனர். இறுதியாக 28 ஆம் திகதி பரிசுக்கு கொண்டுவரப்பட உள்ளது. அதன் பின்னர் அன்று இரவு பரா ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாள் நிகழ்வு இடம்பெற உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்