யூத வழிபாட்டுத் தலம் எரிப்பு.. துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் கைது..!

25 ஆவணி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 5984
La Grande-Motte நகரில் உள்ள யூத தேவாலயம் ஒன்று நேற்று காலை சமூகவிரோதிகளால் எரியூட்டப்பட்டிருந்தது. அதன் வாயிற்கதவுகள் இரண்டும் பெற்றோல் குண்டு வீசி எரிக்கப்பட்டிருந்தன.
காவல்துறையினர் உடனடியாகவே களத்தில் இறங்கி தேடுதல் மேற்கொண்டனர். இரண்டு மகிழுந்துகளில் வருகை தந்த சில சமூகவிரோதிகள் அதில் இருந்து பெற்றோல் குண்டுகளை எறிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலை மேற்கொண்ட குற்றவாளி ஒருவரை நேற்று மாலை 125 கிலோ மீற்ற தொலைவில், Nîmes நகரில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். கைதில் போது பரஸ்பரம் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும், இதில் காவல்துறை வீரர் ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.