Yvelines : எரிவாயு குடுவை வெடித்து தீப்பிடித்த வீடு!
22 ஆவணி 2024 வியாழன் 12:09 | பார்வைகள் : 8447
எரிவாயு குடுவை ஒன்று வெடித்ததில் வீடொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
Saint-Cyr-l'École (Yvelines) நகரில் இச்சம்பவம் நேற்று ஓகஸ்ட் 20, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. எரிவாயு குடுவை ஒன்று திடீரென பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. அதை அடுத்து வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. அதிஷ்ட்டவசமாக சம்பவத்தின் போது வீட்டில் யாரும் இருக்கவில்லை எனவும், இதனால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 கிலோ எடையுள்ள எரிவாயு குடுவை ஒன்றே வெடித்துள்ளது. 47 தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது.


























Bons Plans
Annuaire
Scan