Yvelines : பணத்துக்காக இளைஞனைக் கடத்தி துன்புறுத்தல்..!
20 ஆவணி 2024 செவ்வாய் 17:04 | பார்வைகள் : 9504
19 வயதுடைய இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்லார். Buchelay (Yvelines) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை Les Clayes-sous-Bois நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மாலை 4 மணிக்கு குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடந்த நிலையில், காவல்துறையினர் அழைக்கப்பட்டு குறித்த இளைஞன் மீட்கப்பட்டார்.
ஓகஸ்ட் 15 ஆம் திகதி வியாழக்கிழமை அவர் கடத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டு நாட்களாக அவரை சித்திரவதைப் படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
15,000 யூரோக்கள் பணம் அவரிடம் கேட்டதாகவும், கைகளில் தீயினால் சுட்டும், தாக்குதல் மேற்கொண்டும் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதை அடுத்து, 19 மற்றும் 23 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan