பரா ஒலிம்பிக் - 25,000 பாதுகாப்பு படையினர் குவிப்பு..!!

20 ஆவணி 2024 செவ்வாய் 14:05 | பார்வைகள் : 8031
பரா ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டுவாரங்கள் இந்த போட்டிகள் இடம்பெற உள்ள நிலையில், காவல்துறையினர் ஜொந்தாமினர் இராணுவத்தினர் என மொத்தமாக 25,000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்துள்ளார்.
இல் து பிரான்ஸ் முழுவதும் இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் Place de la Concorde பகுதியில் 28 ஆம் திகதி இடம்பெற உள்ள ஆரம்ப நாள் நிகழ்வின் போதூ 35,000 பார்வையாளர்கள் ஒன்றுகூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.