Paristamil Navigation Paristamil advert login

16 வயதுடைய கைதி தற்கொலை..!

16 வயதுடைய கைதி தற்கொலை..!

19 ஆவணி 2024 திங்கள் 15:13 | பார்வைகள் : 8861


Porcheville (Yvelines) நகர சிறைச்சாலை ஒன்றில் சிறைவைக்கப்பட்டிருந்த இளம் கைதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் குறித்த சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது குற்றம் தொடர்பாகவோ, அவரது சிறைத்தண்டனைக் காலம் குறித்தோ எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அவர் நேற்று ஓகஸ்ட் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது சடலம் உடற்கூறு பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அவரது சிறைச்சாலை அறையில் மேலும் ஒரு கைதி தங்கியிருந்ததாகவும், சம்பவத்தின் போது அவர் அறையில் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்